காலையில் எழுந்தவுடன் இந்த உணவுகளை சாப்பிடுங்க நன்மைகள் ஏராளம்
உடலுக்கு பல தேவையான சத்துக்கள் காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமான சத்து தான் புரதச்சத்து. இந்த புரதங்கள் அமினொ அமிலங்களால் உரவாக்கப்பட்டதாகும்.
இந்த அமினோ அமிலங்கள் 20 காணப்படுகினறன. இது உடலில் வெவ்வேறு வேலைகளை செய்யும். இவற்றால் தசை மற்றும் எலும்புகள் உருவாக்கம் போன்ற விடயத்தில் சிறப்பான பங்கு வகிக்க முடிகின்றது.
புரதச்சத்து உடல் எடையை குறைக்கவும் உடலின் ஆற்றலை சிறப்பாக வலுப்படுத்தவும் இந்த புரதச்சத்துக்கள் அதிகம் பயன்படுகின்றன. இந்த நிலையில் நமக்கு காலை உணவுசாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்.
காலையில் சாப்பிடும் உணவில் இரக்கும் சத்து நமக்கு உடனடியாக உடல் செயற்பாட்டிற்கு சோகின்றது. இந்நிலையில் காலையில் எழுந்தவுடன் புரதச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
காலையில் எழுந்தவுடன் சாப்பிட வேண்டிய புரதம் நிறைந்த உணவுகள்
காலையில் எழுந்ததும் காபி டீ அருந்துவதை தவிர்த்துவிட்டு பழங்கள், கீரை, பால் அடங்கிய ஸ்மூத்தி ஒரு கப் அருந்தலாம். இதை 100 கிராம் அளவில் எடுத்துக்கொண்டாலே இதில் 70 கிராம் புரதம் நிறைந்திருக்கும்.
காலையில் அரிசி தாவல் செய்யப்படும் உணவிற்கு பதிலாக குயினோவா தானியம் எடுத்துக்கொள்ளலாம். குயினோவா புரதச்சத்து நிறைந்த தானியம்.
100 கிராம் குயினோவாவில் 8 கிராம் புரதம் உள்ளது. எனவே அரிசி கோதமை தவிர்த்து இத்தானியம் எடுத்துக்கொள்ளலாம். நட்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால் காலையில் பாதாம் ஊறவைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இந்த 100 கிராம் பாதாமில் 21 கிராம் புரதம் உள்ளது. இதை உங்களுக்கு பிடித்த உணவாக எடுத்துக்கொள்ளலாம். பலருக்கும் அதிகளவில் தெரியாதது தான் வேர்க்கடலை வெண்ணெய்.
இந்த வேர்க்கடலை வெண்ணெய் 100 கிராமில் 25 கிராம் புரதம் மற்றும் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகள் உள்ளன. இதை உங்களுக்கு பிடித்த உணவிலும் தடவி சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |