வாடிக்கையாளருக்கு சொந்த ரத்தத்தை ஊற்றி கொடுத்த பணிப்பெண்! காரணம் என்ன?
உணவகத்தில் பணியாற்றிவரும் பெண் ஒருவர் தனது வாடிக்கையாளருக்கு பானம் ஒன்றில் தனது ரத்தத்தினை கலந்து கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணிப்பெண் செய்த காரியம்
ஜப்பான் நாட்டில் Problem Child Dark Café என்ற அர்த்தம் கொள்ள கூடிய மொண்டாய்ஜி கான் கஃபே டகு என்ற உணவகம் இயங்கி வருகிறது.
இந்த ஹொட்டலில் வேலை செய்பவர்கள் பேய்களை போன்று வினோதமாக உடையணிந்து இருப்பதாக கூறப்படுகின்றது.
இங்கு ஒரு வாடிக்கையாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, பணிப்பெண், தனது இரத்தத்தை காக்டெய்ல் பானத்தில் ஊற்றி பரிமாறியுள்ளார்.
தற்போது இந்த சம்பவத்திற்கு ஹோட்டல் உரிமையாளர் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த விஷயத்தை தன்னுடைய ட்வீட் மூலம் அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து அங்குள்ள கண்ணாடி கோப்பைகளை மொத்தமாக மாற்ற ஒருநாள் ஹோட்டலுக்கு விடுப்பு கொடுப்பதாகவும் அறிவித்ததுடன், குறித்த பணியாளரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வாடிக்கையாளருக்கு ரத்தத்தின் மூலம் நோய் தொற்று ஏதும் பரவியுள்ளதா என்ற சோதனையும் நடத்த தீர்மானித்துள்ளனர்.