பிரபல நடிகை தீபா வெங்கட் இறந்துவிட்டாரா? தீயாய் பரவும் தகவலுக்கு தாயின் பதிலடி!
தமிழ் சினிமாவில் குணச்சித்ர நடிகையாகவும், ஏராளமான சீரியல்களில் முதன்மை வேடத்திலும் நடித்தவர் தீபா வெங்கட்.
மேலும், இவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டும் கூட. சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.
இதனிடையே, தீபா வெங்கட் கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வந்தது.
இதுகுறித்து பேசிய தீபா வெங்கட் தாய், “என் மகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இப்போ அவருக்கு எந்த பிரசசனையும் இல்லை... வீட்டில் நலமுடன் இருக்கிறார்.
அவர் தான் வீட்டில் எல்லா வேலைகளும் செய்கிறார். யார் இதுபோன்று செய்திகளை பரப்பி விட்டார்கள் என தெரியவில்லை. காலை முதலே நிறைய போன்கள் வந்தன.
தயவு செய்து இதுபோன்ற வீண் வதந்திகளை பரப்பாதீர்கள்” என ஆதங்கத்துடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
