நாஞ்சில் பிறந்தநாளுக்கு காதலி பாணியில் திருநங்கை வாழ்த்து! வைரல் பதிவு
சர்ச்சைக்கு மத்தியிலும் நாஞ்சில் விஜயனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, திருநங்கை வைஷுலிசா தற்போது வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நாஞ்சில் விஜயன் - திருநங்கை சர்ச்சை
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி என்னிடம் பாலியல் ரீதியான தொடர்பைக் கொண்டிருந்தார், மனைவியாகவும் நான் வாழ்ந்திருக்கிறேன்.

என திருநங்கை வைஷுலிசா அண்மையில் புகார் கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன் “நானும் அந்த பொண்ணும் சாதாரண நண்பர்கள் தான்.
எங்களுக்குள் இருப்பது தவறான தொடர்பு இல்லை என மனைவியை ஆதாரமாக நிறுத்து ஒரு காணொளியை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.

இந்த காணொளிக்கு பதில் கொடுக்கும் வகையில் திருநங்கை வைஷுலிசா தன்னிடம் வாங்கிய பணத்தை மனசாட்சியிருந்தால் திருப்பி கொடுங்க என்று கேட்டுக்கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் பற்றியும் கேள்வி எழுப்பி ஒரு காணொளியை வெளியிட்டர்.
குறித்த பிரச்சினை இணையத்தில் பொது பிரச்சினையாக மாறி அண்மையில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

அதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன், உங்கள் பயணத்தை நீங்கள் தொடருங்கள்.எனக்கு குடும்பம், குழந்தைகள் இருக்கின்றன ஒருவேளை நான் உங்கள் மனதைக் காயப்படுத்தி இருந்தால் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசியிருந்தார். அதனை தொடர்ந்து இந்த பிரச்சினை சற்று ஓந்தது.

இந்நிலையில், தனது 37 ஆவது பிறந்த நாளை இன்றைய தினம் கொண்டாடி வரும் நாஞ்சில் விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்து, தற்போது திருநங்கை வைஷுலிசா தற்போது வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருவதுடன் அவர் குறிப்பிட்டுள்ள பாணி மீண்டும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |