பிரபல தொகுப்பாளினி ரம்யாவிற்கு என்னாச்சு? கடுமையான நோய் குறித்து வெளியான தகவல்
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம்வரும் ரம்யா, கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாக கூறியுள்ளார்.
தொகுப்பாளினி ரம்யா
தமிழ் சின்னத்திரையில் மிபவும் பிரபலமான தொகுப்பாளினியாக வலம்வருபவர் தான் ரம்யா. பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி தனியார் நிகழ்ச்சிகள், விருது விழா, யூடியூப் பேட்டிகள் என அனைத்திலும் தொகுப்பாளினியாக வலம்வந்தார்.
இவர் உடல் ஆரோக்கியத்தினைக் குறித்து, உடலை கட்டுக்கோப்பாக வைப்பது குறித்து அதிகமாக பேசியிருந்தார். இவ்வாறு பிட்னஸ் பற்றி அதிகமாக பகிர்ந்து வந்த ரம்யா தற்போது கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ரம்யாவிற்கு வந்த நோய் என்ன?
தொகுப்பாளினி ரம்யா கடுமையான நரம்பியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளாராம். உடல் பிட்னஸ் குறித்து அதிகமாக பேசிக் கொண்டிருந்த தான் மூளையின் ஆரோக்கியத்தினை கவனிக்காமல் விட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அதாவது மூளை ஒன்றும் இயந்திரம் கிடையாது... அதிகமான நேரம் வேலை வாங்கும் கருவியாக மூளையை பயன்படுத்தக்கூடாது. உடலுக்கு அக்கறை கொடுத்த தான் இரவில் தூக்கத்தை சரியாக எடுத்துக் கொள்ளவில்லை.
தூக்கத்தினை புறக்கணித்துவிட்டு இரவும் பகலும் ஓடிக்கொண்டிருப்பதை பெருமையாக நினைப்பது மிகவும் தவறு. நமது மூளைக்கும் தேவையான ஓய்வு கட்டாயம் வேண்டும். ஆதலால் இரவில் சரியாக தூங்குங்கள் என்று கூறியள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |