இவரு வேற மாதிரி போலயே.. ஆசையாக பார்க்க வந்த பிரியங்காவை வைப் ஏற்றும் கணவர்
திருமணத்திற்கு பின்னரும் ஷோக்களில் பிஸியாக இருக்கும் பிரியங்கா, கணவருடன் சந்தோஷமாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
பிரியங்கா
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்தவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.
இவர், சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக் போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். சின்னத்திரையில் எவ்வளவு ஆக்டிவாக இருந்தாலும் பிரியங்கா, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவ்வளவு ஆக்டிவாக இருக்கிறார்.
இதற்கிடையில், கடந்த மாதம் இலங்கை தமிழரான வசி என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் கோலாகலமாக நடக்காவிட்டாலும் நண்பர்கள் மற்றும் நெருக்கமான உறவினர்கள் கலந்து கொண்டார்கள்.
கணவருடன் வைப் செய்யும் பிரியங்கா
இந்த நிலையில், சின்னத்திரையில் இருந்து சற்று விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தப் போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனாலும் தற்போதும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்கா, சின்னத்திரையில் என்ன மாற்றம் நடந்தாலும் அதனை கண்டுக் கொள்ளாமல் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்கள் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், தன்னுடைய காதல் கணவர் வசியுடன் சந்தோஷமாக இருக்கும் தருணங்களை புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அத்துடன் திருமணத்தில் கணவர் மற்றும் பிரியங்கா குடும்பத்தினர் மகிழ்ந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவை பார்த்த இணையவாசிகள்,“பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்தவர்களுக்கு பதிலடியாக இருக்கும்..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW