மணிமேகலை போட்ட முதல் போஸ்ட்.. பிரியங்கா ஸ்டோரியில் பகிர்ந்த செய்தி- சேர்ந்து விட்டார்களா?
தொகுப்பாளினி மணிமேகலை Dance Jodi Dance என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதால் பிரியங்காவின் ஸ்டோரி இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
மணிமேகலை- பிரியங்கா விவகாரம்
பிரபல தொலைக்காட்சியில் மிக பிரபலமாக செல்லும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய 5 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சீசன் 5-ல் தான் பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் பாரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடுப்பான மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகினார். பின்னர் அந்த தொலைக்காட்சியில் இருந்து வேறு தொலைக்காட்சிக்கும் சென்று விட்டார்.
பிரியங்கா மறைமுகமாக தாக்கினாரா?
இந்த நிலையில் மணிமேகலை ஜீ தமிழில் Dance Jodi Dance நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியை இதுவரை விஜய் தொகுத்து வழங்கி வந்தார். அவருடன் இணைந்து தற்போது மணிமேகலை தொகுத்து வழங்கவுள்ளார்.
இதனை தொடர்ந்து, மணிமேகலை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் Dance Jodi Dance நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்கள் பகிர்ந்திருந்தார்.
அதில், “என்னுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறேன். மக்கள் வழக்கம் போல உங்களுடைய ஆதரவை எனக்கு கொடுக்க வேண்டும்..” எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு, மோனிஷா, தர்ஷா குப்தா போன்ற சில பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
அதே சமயம், பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விராட் கோலியின் புகைப்படத்தை பகிர்ந்து "கெட்ட பையன் இந்த ஸ்டாருடா.. உன்ன மிஞ்ச யாருடா" என்று அனிருத்தின் பாடலை பயன்படுத்தி இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள்,“ இது பிரியங்கா மணிமேகலைக்காக வைத்த ஸ்டோரியா? அல்லது விராட் கோலிக்காக வைத்த ஸ்டோரியா?” என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |