கணவர் தோளில் சாய்ந்து கண்ணீர்விட்ட பிரியங்கா தேஷ்பாண்டே... வெளியானது திருமண காணொளி!
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தனது திருமண காணொளியை முழுமையாக தற்போது வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரியங்கா தேஷ்பாண்டே
தமிழ் நாட்டில், எத்தனையோ தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இருந்தாலும் ஒரு சிலரே ஸ்டார் தொகுப்பாளர்களாக இருக்கின்றனர்.
அப்படி, நட்சத்திர தொகுப்பாளராக இருப்பவர், பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சில மாதங்களுக்கு முன்னர் வசி சாச்சி என்பவரை திடீர் திருமணம் செய்துக்கொண்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் அமீர், பாவனி, நிரூப், மதுமிதா, அசார் ஆகிய விஜய் டிவி நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
வசி சாச்சி, டிஜே-வாக இருக்கிறார்.திருமண நிகழ்வுகள், சினிமா நிகழ்வுகள், மக்கள் அதிகம் கூடும் டிஸ்கோ க்ளப் உள்ளிட்ட இடங்களில் இவர் டிஜேவாக செயல்படுகிறார்.
இந்நிலையில் பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கணவர் வசி பேசுவதை கேட்டு கண்ணீர் விட்டு இருக்கிறார். முழு திருமண காணொளியையும் அவர் தற்போது வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
