நானும் கம்ருதீனும் அப்படியா பழகினோம்? வருத்தத்தில் vj பார்வதி...வைரலாகும் காணொளி!
பிக்பாஸ் சீசன் 9 vj பார்வதி மற்றும் சீரியல் நடிகர் கம்ருதீன் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்சிக்கு அப்பாலும் உறவில் இருக்கின்றார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், பாருவுடன் கம்ரூதின் வெளியிட்டடுள்ள புதிய புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருவதுடன் கலவையான கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றது.

மேலும் பார்வதி, கம்ருதீனுக்கு இடையிலான உரையாடலில்,நாம் காஜி கப்பிள் என்று சொன்னதை கேட்டு வெளியே வந்ததும் ரொம்பவே கஷ்டமாக இருந்தது என குறிப்பிட்டு பாரு வருத்தப்பட்ட காணொளியும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிக்பாஸ் சீசன் 9 இல் ரெட் கார்டுடன் வெளியேறிய vj பார்வதி மற்றும் கம்ருதீன் பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது.

பிக் பாஸ் சீசன் 9 டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கின் போது, பார்வதி மற்றும் கமருதீன் இருவரும் சாண்ட்ராவை மிகவும் மோசமான வார்தைகளால் விமர்சித்தார்கள்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வார்த்தை முற்றியது. இதனால் கோவத்தின் உச்சத்திற்கு சென்ற பார்வதி, காரை திறந்து சாண்ட்ராவை வெளியில் தள்ளினார்.

இதற்கு, கம்ருதீனும் துணையாக இருந்தால் ,ஒட்டுமொத்த ரசிகர்களும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என கூறினார்கள்.
இதை தொடர்ந்து பார்வதிக்கும் கம்ருதீனுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். ஆனால் பிக்பாஸ் கிராண் பினாலேக்கு பார்வதிக்கும் கம்ருதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன் பின்னர் சற்று நிலை மாறினாலும் இன்னும் பாரு, கம்ருதீனை வெறுக்கும் ஒரு சாராரும், விரும்பும் ஒரு ரசிகர் கூட்டடும் இருக்கத்தான் செய்கின்றது.
இந்நிலையில், பிக்பாஸ் முடிந்த பின்னரும் தங்களின் காதலில் உறுதியாக இருக்கும் பாரு, கம்மு ஜோடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருவதுடன், பார்வதியும், கம்ருதீனும் கலந்துரையாடல் செய்த காணொளியும் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |