CWC நண்பர்களுடன் அவுட்டிங் சென்ற மணிமேகலை- என்ன சொல்லிருக்காங்க பாருங்க
CWC நண்பர்களுடன் அவுட்டிங் போன மணிமேகலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மணிமேகலை
பிரபல தொலைக்காட்சியில் மிக பிரபலமாக செல்லும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய 5 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சீசன் 5-ல் தான் பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் பாரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடுப்பான மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகினார். பின்னர் அந்த தொலைக்காட்சியில் இருந்து வேறு தொலைக்காட்சிக்கும் சென்று விட்டார்.
இன்னும் நட்பா?
இந்த நிலையில் மணிமேகலை ஜீ தமிழில் Dance Jodi Dance நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை இதுவரை விஜய் தொகுத்து வழங்கி வந்தார். அவருடன் இணைந்து தற்போது மணிமேகலை தொகுத்து வழங்கவுள்ளார்.
மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை குத் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த நண்பர்களுடன் வெளியில் சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், ”குத் வித் கோமாளி 3 முதல் இன்று வரை எங்கள் பிணைப்பு மேலும் வலுவடைந்துள்ளது. அத்துடன் நினைவுகள் மற்றும் வேடிக்கையான நேரங்களுக்கு நன்றி..” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன், “நண்பர்கள் எங்கு வேண்டும் என்றாலும் இருக்கலாம். அதற்கு யாரும் தடையில்லை..” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |