8 வயதில் மகன்… மகாலக்ஷ்மி முதல் கணவரை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா?
நடிகை மகாலக்ஷ்மி தனது முதல் கணவரை விவாகரத்து செய்ததன் காரணம் வெளியாகி வைரலாகி வருகின்றது.
நடிகை மகாலக்ஷ்மி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். ரவீந்தரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்தான்.
இருவரும் காதலித்து தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர்.
மகாலக்ஷ்மி ஏற்கனவே அனில்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்தார் என்பதும் இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார் என்ற தகவலும் நாம் அறிந்த ஒன்றே.
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அனில்குமாரை மகாலக்ஷ்மி பிரிந்தார்.
முதல் கணவரை பிரிய இது தான் காரணமா?
குடும்பப் பிரச்சனையால் இனி சேர்ந்து வாழ முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.
அதன்பிறகு சில காலம் சீரியலில் நடிக்காமல் இருந்த மகாலக்ஷ்மி, பின்னர் மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கினார்.
கடந்த 2 ஆண்டுகளாக ரவீந்தரை காதலித்து வந்த மகாலக்ஷ்மி மகனின் சம்மதத்துடன் அவரை கரம்பிடித்துள்ளார்.
அடுத்த சர்ச்சை
கணவரை பிரிந்ததும் ரவீந்தர் மீது காதல் வந்ததா அல்ல ரவீந்தர் மீது காதல் வந்ததால் முதல் கணவரை பிரிந்தாரா என்ற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
இரண்டு வரும் காதலித்து திருமணம் செய்ததாக கூறிய நிலையில் இந்த சர்ச்சை கிளம்பியுள்ளது.
இவர்களின் திருமண செய்தி வந்ததில் இருந்து சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் தொடர்கின்றது. எனினும், அதை எல்லாம் கடந்து இருவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.