மகளுக்கு மாப்பிள்ளை பார்த்த விவேக்! கடைசியில்... கதறி அழும் குடும்பம்
சினிமாவில் நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி, சமூகம் சார்ந்த கருத்துகளை மக்களுக்கு கொண்டு செல்வதில் பாடுபட்டவர் நடிகர் விவேக்.
அப்துல் கலாமின் சொல்லை வேத வாக்காக கொண்டு இயற்கையை காப்பாற்ற லட்சக்கணக்கான மரங்களை நட்டு சேவை செய்தவர் நடிகர் விவேக்.
ஆனால் இவரின் எதிர்பாராத இழப்பால், ஒட்டு மொத்த தமிழர்களே பேரதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்கள், நல்ல மனிதர், ஏன் இவ்வளவு சீக்கிரம் ஆண்டவன் அழைத்துக் கொண்டான்? என்றெல்லாம் மக்களின் புலம்பல்களை கேட்க முடிகிறது.
இந்நிலையில் தன்னுடைய மூத்த மகளுக்கு திருமணத்திற்காக விவேக் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவருடைய மூத்த மகள் அமிர்தநந்தினி ஆர்க்கிட்டெக்ட்டாக உள்ளார். இரண்டாவது மகள் தேஜஸ்வினி சிட்டி பேங்கில் பணிபுரிந்து வருகிறார்.
இதில் மூத்த மகள் அமிர்தநந்தினிக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார் விவேக். இந்த நேரத்தில்தான் யாரும் எதிர்பாராத வண்ணம் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார் விவேக்.
ஏற்கனவே மகனை இழந்த விவேக்கிற்கு மகன் ஸ்தானத்தில் இருந்து அவரது இளைய மகள் தேஜஸ்வினி இறுதிச்சடங்குகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.