3 நாட்களில் கருவளையத்தை நிரந்தரமாக இல்லாமல் ஆக்கும் 4 வழிகள்! இந்த மருந்தை போட்டால் போதும்..
Eye Problems
Skin Care
By DHUSHI
இன்றைய காலத்திலிருக்கும் இளம் பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் கருவளைய பிரச்சினை இருக்கிறது.
இந்த பிரச்சினை ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து தேடிப் பார்த்தோமானால், அதிகமான இலத்திரனியல் பொருட்கள் பாவனை, நோய்களின் அறிகுறிகள், தூக்கமின்மை போன்ற காரணங்களை கூறலாம்.
இந்த பிரச்சினைகள் ஏதுவும் இல்லை, ஆனாலும் கருவளையம் இருக்கிறது என்றால் இது கண் தொடர்பான பிரச்சியானையாகவும் இருக்கலாம்.
அந்த வகையில் கருவளையம் ஏன் ஏற்படுகிறது? இதனை எவ்வாறு சரி செய்யலாம் என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள்
- தொலைத் தொடர்பு சாதனங்கள் அதிக பாவிக்கும் பொழுது, உடலிலுள்ள தோல்களை விட சுமார் 2மி. மீ தடிமன் கொண்ட கண்கள் பாதிக்கிறது. இதனால் கருவளையம் ஏற்படும்.
- அதிக வேலைப்பளு காரணமான உடல் சோர்வு ஏற்படும். இந்த களைப்பை கண்கள் உணர்த்துகிறது.
- கண்களில் ஏதாவது தொற்றுக் காரணமாக சில நேரங்களில் அரிப்பு ஏற்படும். இதனால் கண்களை கசக்க நேரிடும் போது கருவளையம் ஏற்படுகின்றது.
- உடலிலுள்ள ஊட்டச்சத்துகள் குறையும் போது சிலருக்கு கண் கருவளையம் ஏற்படும்.
- அதிக நேரம் வேலைப்பளு காரணமாக வெயிலில் அலைவதாலும் கருமை தோன்றும்.
சரிச் செய்யும் வழிமுறைகள்
- கண்களில் கருவளையம் ஏற்படும் போது வைட்டமின் ஈ அதிகம் உள்ள எண்ணெய்யை எடுத்து கண்ணைச் சுற்றி மஜாஜ் செய்து வந்தால் காலப்போக்கில் கருவளையம் மறையும்.
- கண்கள் மட்டும் கருப்பாக காணப்படும் போது வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் காபித்தூள் சர்க்கரை ஆகியவற்றை ஒரு கலவையாக கலந்து, கருவளையம் உள்ள இடத்தில் தடவி, 15 நிமிடம் காய விட்டு கழுவினால் கருவளையம் மறையும்.
- உருளைகிழங்கிலுள்ள சாற்றை எடுத்துக் கண்களில் பூசி மசாஜ் செய்து வந்தால் காலப்போக்கில் கருவளையம் மறையும்.
- மேலும் வெள்ளிரிக்காயை மெல்லிய இதழ் போன்று வெட்டி, அதனை கண்களில் வைத்து ஒற்றி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது கண்களில் இருக்கும் வெப்பம் வெளியேற்றப்பட்டு, கண்களில் இருக்கும் கருவளையம் மறையும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US