நடிகர் விஷ்ணு விஷாலின் அக்காவை பார்த்துள்ளீர்களா? அவரே வெளியிட்ட வைரல் புகைப்படம்
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் விஷ்ணுவிஷால்.
அதன்பின்னர், முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் ராட்சசன் திரைப்படம் செம ஹிட்டாகி, வசூல் சாதனை படைத்தது.
பின்னர் இறுதியாக விஷ்ணு விஷால் காடன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணுவிஷால், பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா என்பவரை காதலித்து வந்தார்.
அதன்பின்னர் அண்மையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இதனிடையே, விஷ்ணு விஷால் அவரின் அக்காவின் பிறந்தநாளில் ஒன்றாக சேர்ந்துகொண்டு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.