படப்பிடிப்பில் விபத்து.. நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதி! வெளியான வீடியோ!
நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து எனிமி படத்தில் நடித்துள்ளனர். இதற்கான ஷூட்டிங் பணிகள் முடிவடைந்த பிறகு, புதுமுக இயக்குநர் து.ப. சரவணனின் படத்தில் நடித்து வருகிறார் விஷால்.
இந்த படத்திற்கான ஷூட்டிங் பணிகள் ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஃப்லிம் சிட்டியில் நடந்து வருகிறது.
இதையடுத்து, நடிகர் விஷால், மலையாள நடிகர் பாபு ராஜ் ஆகியோருக்கு இடையேயான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட விபத்தில் விஷால் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடிபட்டு மயங்கி விழுந்த விஷாலை படக்குழு மருத்துவமனையில் அனுமதித்துள்ளது. மேலும், மருத்துவ பரிசோதனையில், விஷாலுக்கு முறையான பிஸியோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.
படப்பிடிப்பில் காயம் அடைந்த விஷால்...#Vishal31 #Vishal @VishalKOfficial pic.twitter.com/TesU6TLNVr
— Sathishwaran PRO (@SathishwaranPRO) July 21, 2021