விஜய் ஆண்டனியுடன் சேர்ந்து Vibe-ஆன விஷால்- மீண்டு வந்த பிரபலத்தால் எழுந்த கூச்சல் சத்தம்
விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியில் நடிகர் விஷால் ஆடிப்பாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மதகஜராஜா திரைப்படம்
சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி வெற்றி நடைப்போடும் படம் தான் மதகஜராஜா.
இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், மனோ பாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.
ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.
பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனை ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்த வருடம் பொங்கலுக்கு முதல் முதலில் திரையிடப்பட்டது. மதகஜராஜா 12 வருடம் கழித்து இந்த படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது.
விஜய் ஆண்டனியுடன் வைப் செய்த விஷால்
இந்த நிலையில், திரைப்படம் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்ட போது அவருடைய கைகள் நடுங்கி இருந்தது. குரலிலும் நடுக்கம் தெரிந்தது. இதன்போது எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதுடன், ரசிகர்களும் பதறிப்போய் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
மேலும், சமீபத்தில் நடந்த படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட விஷால் முழுமையாக குணமாகியதுடன், “என்னுடைய முதல் இசை நிகழ்ச்சியில் என்னுடைய பாட்டை கேட்பதற்கு கிட்டத்தட்ட 40,000 பேர் வராங்கன்னு கேள்விப்பட்டேன். விஜய் ஆண்டனி எத்தனையோ இசை நிகழ்ச்சி நடத்தி இருக்காரு. ஆனால், நான் பாடப்போகும் இந்த இசை நிகழ்ச்சி வேற லெவல்ல இருக்கும்னு நினைக்கிறேன். அங்கு இருக்கிற கல்லை எல்லாம் பொறுக்கி போட சொல்லிட்டேன்.ஏனெனின் பாதுகாப்பு முக்கியம்..” என பேசியிருந்தார்.
இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் “லைவ் கான்சர்ட்” நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. அதில் விஷால் கலந்து கொண்டு ரசிகர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் விஷாலை பற்றி விமர்சனங்களை பரப்பியவர்களுக்கு பெறும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அத்துடன், “பழைய விஷாலை பார்க்க முடிகிறது..” எனவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
OG thalaivan vishal 🪩💃🏻 pic.twitter.com/ZtLavuelYZ
— Prathiiii (@Prathikax5) January 18, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |