நிச்சயதார்த்தம் வரை சென்று நின்றுப் போன விஷால் திருமணம்: இந்த நடிகை தான் காரணமாம்
நிச்சயதார்த்தம் வரைக்கும் சென்று திருமணம் நின்றுப் போனதற்கு ஒரு நடிகைதான் காரணம் என சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
நடிகர் விஷால்
தமிழ் சினிமாவில் செல்லமே என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் நடிகர் விஷால். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் தேர்வு செய்யும் படங்கள் எல்லாம் அடிதடி படங்களாகத் தான் இருக்கும்.
இவர் சரத்குமாரின் மகளான வரலட்சுமியை காதலித்து வந்தார். இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், சரத்குமார் திருமணத்திற்கு சம்மதிக்காக காரணத்தால் அனிஷா ரெட்டி என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் வரை சென்று அதுவும் நடக்காமல் போனது.
இதனால் தனக்கு திருமண ராசியில்லை என்று எண்ணி நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தி சில படங்களில் தொடர்ந்தும் நடித்து வருகிறார்.
நின்றுப்போன திருமணம்
விஷாலின் திருமணம் பற்றி பல சர்ச்சைகள் எழுந்த போதிலும் அவர் முன்னதாக அனிஷா செட்டி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததது. ஆனால் இவர்களின் திருமணம் நடைபெறவில்லை.
நிச்சயதார்த்தத்தோடு நின்று விட்டது இதற்கு காரணம் விஷாலுடன் இணைந்து நடித்த லட்சுமி மேனனுடன் நிறைய காதல் கிசு கிசுக்கள் எழுந்தது.
இந்நிலையில் விஷால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யவிருக்கும் தகவல் கேட்டு அனிஷா ரெட்டிக்கு போனில் பேசியிருந்தாகவும் நடந்த விடயங்களை எல்லாமல் மறைக்காமல் சொன்னதாகவும் இதனால் தான் அனிஷா ரெட்டி திருமணத்தை நிறுத்தியுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
மேலும், நடிகை லட்சுமி மேனன்தான் விஷாலின் திருமணம் நின்றுப் போனதற்கு காரணம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |