ஈஸியா விசா கிடைக்கக் கூடிய நாடுகள்: நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!
பொதுவாகவே சிலர் தனது அன்றாட வேலைகளுக்கு அழுத்துப்போய் மன நிறைவிற்காகவும் மனநிலையை புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும் அடிக்கடி தங்களுக்கு பிடித்த நாடுகளுக்கோ அல்லது இடங்களுக்கோ சுற்றுலா சென்று வருவார்கள்.
அதிலும் ஒரு சிலருக்கு சொந்த நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு சென்று அங்கிருக்கும் புதிய இடங்களை ஆசைத்தீர ரசிக்க விரும்புவார்கள்.
அப்படி எவ்வித சிக்கல்கள்களும் தாமதமும் இல்லாமல் ஈஸியாக விசா கிடைக்கும் நாடுகளுக்கு சென்று வந்தால் வேறு ஒரு அனுபவமாகத் தான் இருக்கும். அந்த வகையில் ஈஸியா விசா கிடைக்கும் நாடுகள் எவை என்பது பற்றி தெரிந்துக் கொள்வோம்.
ஐஸ்லாந்து உலகின் அமைதியான நாடுகளில் பட்டியலில் இந்த ஐஸ்லாந்து நாடும் இடம் பிடித்திருக்கிறது.
1. ஐஸ்லாந்து
கிரீலாந்து நாட்டிற்கு அருகில் ஐரோப்பாக் கண்டத்தில் இருக்கிறது மேலும், இது ஒரு தீவு நாடாகும்.
2. லிதுவேனியா
பால்ட்டிக் கடலுக்குத் தென் கிழக்குக் கரையில், வடக்கே லாத்வியாவும், தென்கிழக்கே பெலாரசும், தென்மேற்கே போலந்தும், உருசியாவை சேர்ந்த பிறநாட்டால் சூழப்பட்ட காலினின்கிராடு ஓபுலாஸ்ட்டும் எல்லைகளாக அமைந்த நாடு தான் லித்துவேனியா. இந்த நாடு ஐரோப்பா ஒன்றியத்தின் ஒரு நாடாக 2004ஆம் ஆண்டு மாறியிருக்கிறது.
3. லாட்வியா
லாட்வியா நாடு வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் எல்லைகளில் வடக்கே எஸ்தோனியா, தெற்கே லித்துவேனியா, கிழக்கே ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உள்ளன. மேற்கே சுவீடனை பால்ட்டிக் கடல் பிரிக்கின்றது. இந்த நாடும் லிதுவேனியா போல ஐரோப்பா ஒன்றியத்தின் ஒரு நாடாக 2004ஆம் ஆண்டு மாறியிருக்கிறது.
4. ஸ்லோவாக்கியா
ஸ்லோவோக்கியா குடியரசு நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடாகும். இதன் மேற்கில் செக் குடியரசும் ஆஸ்திரியாவும் வடக்கில் போலந்தும் கிழக்கில் உக்ரைனும் தெற்கில் ஹங்கேரியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஓர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஆகும்.
5. பின்லாந்து
உலகின் மகிழ்ச்சியான நாடாக இருக்கும் பின்லாந்து நாட்டிற்கு ஈஸியாக விசா கிடைக்கும். பின்லாந்து மக்கள் தொகை சுமார் 55.4 லட்சம் தான். இந்தியாவை விட 10 மடங்கு சிறிய நாடு பின்லாந்து. இது வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நோர்டிக் நாடுகளில் ஒன்றாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |