தாய் சிங்கத்தையே ஒரு நிமிடம் அலற விட்ட சிங்க குட்டி... என்ன ஒரு ரியக்சன்! வைரலாகும் வீடியோ
விலங்குகளில் வேட்டையாடும் தன்மை கொண்ட சிங்கம் ஒன்று துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த சிங்கமே அச்சப்படும் வகையிலான வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
பெண் சிங்கம் ஒன்று தரையில் படுத்தபடி ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறது.
பெண் சிங்கத்தின் பின்னால் இருந்த குட்டி மெல்ல, பதுங்கியபடி முன்னேறி செல்கிறது.
Lion cub sneaks up on mom..🦁pic.twitter.com/zJgqVXjYwd😅
— 𝕐o̴g̴ (@Yoda4ever) October 1, 2022
ஒரு கட்டத்தில் பின்னால் இருந்த சிங்க குட்டி தாயின் மீது பாய்ந்து அதனை மிரட்ட முயற்சிக்கிறது. இதனால், திடுக்கிட்ட பெண் சிங்கம் உடனடியாக எழுந்து சுற்றி பார்க்கிறது.
பின்னர், தனது குட்டி என்று தெரிந்ததும் அமைதியாகி விடுகிறது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.