50 வயதிலும் நதியா போல பேரழகியாக ஜொலிக்கணுமா? இந்த ஒரே ஒரு பானம் போதும்!
எல்லாரும் தங்கள் சருமம் பொலிவுடனும் இளமையுடனும் இருக்க க்ரீம்களையே நாடுகின்றனர்.
ஆனால் உங்க சருமம் பொலிவுடன் சுத்தமாக இருக்க கொத்தமல்லி இலை மற்றும் லெமன் ஜூஸ் பெருமளவு உதவுகிறது.
கொத்தமல்லி இலை மற்றும் லெமன் ஜூஸ் ஆனது உங்க சருமத்தை சுத்தம் செய்வதோடு அதிலுள்ள நச்சுத் தன்மைகளை நீக்குகிறது.
50 வயதிலும் நதியா போல பேரழகியாக ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் இந்த பானத்தை தினமும் குடியுங்கள்.
கொத்தமல்லி ஜூஸ் செய்முறை
- தேவையானவை கொத்தமல்லி தழை
- எலுமிச்சை பழம் – 1/2
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி தழையை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து, அதனை நன்கு கழுவி மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் சிறிதளவு உப்பும், தண்ணீரும் சேர்த்து நன்கு அரைத்து விடுங்கள்.
அரைத்த பின் இதனை வடிகட்டி எடுத்து ஒரு டம்ப்ளரில் விட்டு அதனுடன் பாதி எலுமிச்சை பழ சாற்றினையும் சேர்த்து கொள்ளுங்கள்.
இப்போது கொத்தமல்லி ஜூஸ் தயார்.