அந்நியன் ஹீரோவாக வடிவேலு நடிச்சா எப்படி இருக்கும்! பின்னி பெடலெடுக்கும் காமெடி
அந்நியன் படத்தில் வடிவேலு நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை நெட்டிசன்கள் காட்டியுள்ளனர்.
ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் விக்ரம் மூன்று விதமான ரோல்களில் நடிப்பில் மிரட்டி இருப்பார்.
அதுவும் அம்பி, அந்நியன் என மாறி மாறி பேசி பிரகாஷ்ராஜை மிரட்டும் காட்சி ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
விக்ரம் நடிப்பு திறமைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என ரசிகர்கள் சொல்வதுண்டு.
ஒருவேளை அந்த சீனில் வடிவேலு நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என எடிட் செய்து மீம் கிரியேட்டர்கள் செய்திருக்கும் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.
அதனை நீங்களே பார்த்து ரசியுங்கள்.
தலைவன் அந்நியன் ல நடிச்சிருந்தா 😂😂😂👇 pic.twitter.com/j8NmjkLsqd
— ℳsd彡இதயவன்彡 (@itz_idhayavan) July 3, 2022