அடச்சீ... இதை பார்த்தால் கேக் சாப்பிடவே மறந்துடும் போலயே!
அச்சு அசலாக உயிருடன் பாம்பு போன்ற கேக் வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளரான நடாலி சைட்செர்ப், மனித உருவம் உட்பட பல்வேறு வடிவங்களில் கேக் தயாரித்து வருகிறார்.
பார்ப்பதற்கு அப்படியே தத்ரூபமாக இருப்பதால் இவரின் கேக் வடிவமைப்புகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பாம்பு வடியில் கேக் ஒன்றை தயாரித்து அதை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
அதில் மஞ்சள் நிற பாம்பு ஒன்று காட்டப்படுகிறது. திடீரென்று அதனை நடாலி ஒரு கத்தியை எடுத்து வெட்டுகிறார்.
அதன் பின் அது கேக் என்பதை உணர முடிகிறது. அந்த அளவுக்கு கேக்கை உயிருடன் உள்ள பாம்பு போல நடாலி தயாரித்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியில் உறைய லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.