பக்கத்து வீட்டு கிழவி சண்டையை எட்டி பார்த்த நாய்! என்ன ஆர்வமப்பா உனக்கு
பக்கத்து வீட்டு சண்டையை மதிலில் இருந்து ரொம்ப கஸ்டப்பட்டு எட்டி பார்க்கும் நாயின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாய் செய்த காரியம்
பொதுவாக வீட்டின் பாதுகாப்பு கருதி பெரும்பான்மையினோர் வீடுகளில் செல்லப்பிராணியாக நாய்களை வளர்ப்பார்கள்.
மனிதர்களை விடவும் சில நேரங்களில் புத்திக்கூர்மையுடன் நாய்கள் செயல்படுவது பற்றி பலமுறை கேள்விப்பட்டிருப்போம்.
இந்த வீடியோவில், பக்கத்து வீட்டில் நடக்கும் சண்டையை மிகவும் கஸ்டப்பட்டு எட்டிப்பார்க்கும் நாயின் வீடியோ வைரலாகி வருகிறது.
ஒரு காலை மதிலும், தென்னை மரத்திலும் கால் வைத்து மெது மெதுவாக மேலே சென்று எட்டிப்பார்க்கிறது.
வியக்க வைக்கும் வீடியோ
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை KALAIARASAN C.S. என்பவர் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் வீட்டை காவல் பார்க்க நாய் வளர்த்தால், இது பக்கத்து வீட்டு கிழவி சண்டையை எட்டி பார்த்துக் கொண்டிருக்கிறது என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
— palani Nadarajah (@pasel) November 17, 2022