போத்தல் தண்ணீரை அண்ணாந்து குடிக்கும் பாம்பு! மிரண்டு போன இணையவாசிகள்
வாயை பிளந்து போத்தலில் தண்ணீர் குடிக்கும் பாம்பின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
போத்தலில் தண்ணீர் வாங்கி குடிக்கும் பாம்பு
இணையப்பக்கம் சென்றாலே அதிகம் விலங்குகளின் வீடியோக்கள் தான் நிரம்பி கிடக்கிறது.
அந்தளவு விலங்குகள் சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடைந்து விட்டது.
இதன்படி, நாகபாம்பு ஒன்று போத்தலில் உள்ள தண்ணீரை வாயை பிளந்து வாங்கி குடிக்கும் காட்சி இணையத்தில் வீடியோவாக பகிரப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது பாம்பிற்கு தாகம் என்றால் இப்படியும் தண்ணீர் குடிக்கும் என்பது தெளிவாகிறது.
இந்த நிலையில் இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த இணையவாசிகள், “ தண்ணீர் கொடுக்கும் உங்களுக்கே பால் ஊற்ற வைத்து விடும் பாம்பு.” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.