மடக்கி வைக்கப்படும் மாடிப்படி! வியக்க வைக்கும் தொழிநுட்பம்
வீட்டில் அதிக இடத்தை அடைத்து நிற்பதிலும், அதிக செலவு கொண்டதாக இருப்பதிலும் மாடிப்படிக்கு மிக முக்கிய பங்கு உண்டு.
இடப்பற்றாக்குறை உள்ள நிலையில் மாடிப்படி அமைப்பதே பெரும் சிரமமாக இருக்கும்.
ஆனால், இதற்காக ஒவ்வொரு முறையும் ஏணி வைத்து ஏறிக் கொண்டிருக்க முடியுமா என்ன? அதற்கு தீர்வு தரும் வகையில் தான் இப்போது ஃபோல்டிங் என்று சொல்லக் கூடிய மடக்கி வைத்துக் கொள்ளும் வகையில் மாடிப்படி அறிமுகமாகியுள்ளது.
இரும்புக் கம்பி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மெட்டீரியலில் படிகளை செய்து, அதனை சுவற்றோடு மடக்கி வைத்துக் கொள்ளலாம்.
Great design pic.twitter.com/xpazcjLlXj
— Tansu YEĞEN (@TansuYegen) September 13, 2022
தேவைப்படும் சமயத்தில் மட்டும் அவற்றை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுபோன்ற படியை ஒருவர் பொருத்தி, பயன்படுத்தி வரும் நிலையில், டிவிட்டரில் அதுகுறித்த வீடியோ டிரெண்ட் ஆகி வருகிறது.