Viral Video: தாலி கட்ட சில மணிநேரத்துக்கு முன் மணமகன் நேர்ந்த கதி
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்ட மணமகனை மரத்தில் கட்டி வைத்த மணமகளின் குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேசத்தின் ப்ரதாப்கர் பகுதியை சேர்ந்தவர் அமர்ஜீத் வர்மா.
இவருக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் ஜோராக நடந்தது.
திருமண நாளும் வந்துவிட, மணமகளின் கழுத்தில் தாலி கட்ட ஆசையாக காத்துக் கொண்டிருந்தார் மணமகன்.
ஆனால் திருமணம் நடப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அதாவது மாலை மாற்றிய பிறகு மணமகன், மணமகள் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டதாக தெரிகிறது.
प्रतापगढ की तस्वीरें देखिए
— Rahul Sisodia (@Sisodia19Rahul) June 15, 2023
दूल्हे ने किया शादी से इंकार ,दूल्हे को बंधक बनाकर दी गई तालिबानी सज़ा#pratapgarh pic.twitter.com/OtqTdzNj5A
இதனால் கோமடைந்த மணமகள் வீட்டார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர், ஆனாலும் வரதட்சணை கண்டிப்பாக வேண்டுமென மணமகன் கூறிவிட, அதிரடி முடிவெடுத்த மணமகள் வீட்டார் மரத்தில் கட்டி வைத்துவிட்டனர்.
இந்த தகவல் மந்தட்டா போலிசாருக்கு தெரியவர, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மணமகனை விடுவித்ததுடன் கைது செய்தனர்.
மேலும் போலிசார் கூறுகையில், திருமண நாளில் அமர்ஜித்தின் நண்பர்கள் தவறாக நடந்து கொண்டதாலேயே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது முற்றிய நிலையில் மணமகனை கட்டிவைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.