Viral Video: பாம்பை பிடித்துவிட்டு இறங்கிய நபருக்கு இப்படியொரு சோகமா? பதற வைக்கும் காட்சி
பாம்பு பிடி வீரர் ஒருவர் பாம்பை பிடித்துவிட்டு கீழே இறங்குகையில் ஏணியிலிருந்து கீழே விழும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
கீழே விழுந்த நபர்:
பொதுவாக பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழி உண்டு. பாம்புகள் அதிகமான விஷத்தன்மை கொண்டுள்ளதுடன், மனிதர்களை தீண்டினால் உயிர் போகும் நிலையும் இருக்கும்.
ஆனால் தற்போது பாம்புகள் மனிதர்கள் இருக்கும் குடியிருப்பு பகுதிகளான வீட்டிற்குள்ளும் வந்துவிடுகின்றது. சில தருணங்களில் வாகனங்களிலும் பதுங்கி இருக்கின்றது.

இப்போது வெளியாகிய வீடியோவில் பாம்பு பிடி வீரர் ஒருவர் பாம்பு பிடிப்பதற்காக ஒரு இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது பாம்பை ஏணி மீது ஏறி பிடிக்கவும் செய்துள்ளார்.
அவர் பாம்பை பிடித்துவிட்டு கீழே இறங்குகையில் திடீரென்று ஏணியின் படி கம்பு உடைந்து விடுகின்றது. இதனால் அந்த மனிதர் கீழே விழுந்தார் அதனால் பாம்பும் கீழே விழுந்தது. ஆனால் அவர் முயற்சியை விடாமல் மீண்டும் அதை தேடி செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது .
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |