கண் இமைக்கும் நேரத்தில் நண்பனின் உயிரை காப்பாற்றிய நபர் - வைரலாகும் வீடியோ
கண் இமைக்கும் நேரத்தில் நண்பனின் உயிரை காப்பாற்றிய நபரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நண்பனின் உயிரை காப்பாற்றிய நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இரு நண்பர்கள் சாலையில் நடந்துச் செல்கின்றனர். அப்போது, சாலையில் எதிர்பாராத விதமாக மிகப் பெரிய வாகனம் ஒன்று திடீரென்று தலைகுப்புற கவிந்தது.
அப்போது, அந்த வாகனம் தன்னுடன் வந்த நண்பர் மேல் விழப்போவதைப் பார்த்த இன்னொரு நபர், தன் நண்பனை அப்படியே பிடித்து இழுத்து உயிரை காப்பாற்றினார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாகனம் சாலையில் கீழே விழுந்து பெரிய விபத்துக்குள்ளானது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் உயிரை காப்பாற்றிய நண்பருக்கு பாராட்டு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Amazing reflexes? pic.twitter.com/lqjMXpyxS5
— security footage (@security_footag) March 24, 2023