சாக்லேட் தராததால் காவல் நிலையம் சென்ற சிறுவன்! தரமான வீடியோ பதிவு..
தனது அம்மா மீது 3 வயது சிறுவன் ஒருவன், புகார் அளிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்போர் மாவட்டத்தில் உள்ள தெத்தலை எனும் கிராமத்தில் தான் இந்த சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தந்தை பதில்
குறிப்பிட்ட தினத்தில் அம்மாவை பற்றி புகார் செய்வதற்கு சிறுவன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளான். இதன் போது காவல்துறை அதிகாரியொருவர் சிறுவனிடம் என்ன விடயம் என வினவ, அவனின் தந்தை பதிலளித்துள்ளார்.
சிறுவனின் தந்தை அதிகாரிகளிடம் பேசுகையில்,"வீட்டில் அவனது அம்மா அவனை குளிப்பாட்டி கண்ணிற்கு மை இட்டுக்கொண்டிருந்த போது, சாக்லேட் கேட்டு அவரை தொந்தரவு செய்தான்.
இதனால் அவனது கன்னத்தில் செல்லமாக எனது மனைவி தட்டினாள். உடனே கோபப்பட்டுக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் போகவேண்டும் என என்னை அழைத்தான். நானும் வேறுவழியின்றி அழைத்துவந்தேன்" என கூறியுள்ளார்.
சிறுவனின் புகார்
இது உண்மையா? என சிறுவனிடம் கேட்ட போது அவனின் மழலை மொழியால், "என்னுடைய சாக்லேட்களை எல்லாம் எனது அம்மா எடுத்துக்கொள்கிறார். அவரை ஜெயில்ல போடுங்க" என கூறியுள்ளான்.
இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ பார்ப்பவர்கள் சிறுவனின் நெகிழ்ச்சி பதிவை பாராட்டி வருகிறார்கள்.
Three-year-old gets angry with mother, goes to the police station to file a complaint, says "mother steals my toffees, put her in jail."#MadhyaPradesh #Burhanpur #Viralvideo pic.twitter.com/SI4CvWgYj0
— Hate Detector ? (@HateDetectors) October 17, 2022