பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜிபி முத்து: முதலில் வெளியிட்ட வைரல் பதிவு
பிக்பாஸை விட்டு வெளியேறிய ஜிபி முத்து அவருடைய ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ்
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து இரண்டாவது வாரம் நிறைவடைந்துள்ளது. சுமார் 19 போட்டியாளர்களுடன் மூன்றாவது வாரம் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த வீட்டிலே வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் ஜி.பி.முத்து, இவர் பிக்பாஸ் வருவதற்கு முன்பே தனி ஆர்மி ஆரம்பிக்கபட்டு ரசிகர்கள் குவிந்து வந்தனர்.
ஆனால் இவர் கடந்த சில நாட்களாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அடம்பிடித்து வந்த நிலையில் அவருடைய விருப்பப்படி தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
வைரல் வீடியோ
வெளியேறிய பின்னர் வீட்டிலிருக்கும் அவரது பிள்ளைகளுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்து, ஊட்டியும் விட்டிருக்கிறார்.
இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ அவர் வெளியேறிய பின்னர் வெளியிட்ட முதல் வீடியோவாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து இவரது ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருக்கிறார்கள்.