ஜாலியோ ஜிம்கானா!!!! கிரிகெட் வீரர் தேனியில் கலக்கல் நடனம்! இணையத்தில் வைரல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்-ன் பீஸ்ட் பட பாடலுக்கு டோனி உள்பட 4 வீரர்கள் நடனமாடுவது போல உள்ள வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
16-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தீவிரமாக வலை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
வரும் 31-ம் திகதி தொடங்கும் இந்தப் போட்டி நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
இதற்காக சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே இவர்கள் ஆடிப்பாடி குதுகலமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

வைரல் வீடியோ
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
45அதில் டோனி கிட்டார் வாசிப்பது போன்றும் அருகில் ருதுராஜ், சிவன் துபே, தீபக் சாஹர் ஆகியோர் நடனமாடுவது போன்று இருந்தது.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு இவரது ரசிகர்கள் பலர் கமெண்டுக்களை அள்ளிக்குவித்து வருகின்றார்கள்.