கொரோனா உடையில் நடந்த விசித்திர திருமணம்! வைரலாகும் காட்சிகள்
கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்த மணமகனை துணிச்சலுடன் மணந்த மணப்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
தாசில்தார் மற்றும் குழுவினர் திருமணத்தை நிறுத்த சென்ற போது, முழு பாதுகாப்புடன், கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றி PPE கிட் அணிந்து திருமணம் நடந்த சம்பம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
#WATCH | Madhya Pradesh: A couple in Ratlam tied the knot wearing PPE kits as the groom is #COVID19 positive, yesterday. pic.twitter.com/mXlUK2baUh
— ANI (@ANI) April 26, 2021
மத்திய பிரதேஷின் ரட்லம் என்ற பகுதியை சேர்ந்த ஆண் ஒருவருக்கு, திருமண தேதி நெருங்கும் சமயத்தில் ஏப்ரல் 19ம் தேதி கொரோனா பாதிப்பு உண்டானது.
கொரோனா பாதிப்பு இருந்தும் இளம் ஜோடி திருமணத்திற்கு தயாரானது.
இந்த செய்தி அறிந்த அந்த ஊரின் தாசில்தார் தனது குழுவுடன் திருமணத்தை நிறுத்த சம்பவ இடத்திற்கு சென்றார்.
ஆனால், திருமண ஜோடி மிகுந்த பாதுகாப்புடன் PPE கிட் உடை அணிந்து திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து, அதே போல திருமண ஏற்பாடுகளும் நடந்தன.
அரசு ஊழியர்கள் விதித்த எல்லா கட்டுப்பாடுகளையும் பின்பற்றி PPE கிட் மற்றும் பிற கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் இளம் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.