12 நாட்கள் இடைவிடாமல் சுற்றிய ஆடுகள் ! CCTV இல் சிக்கிய அமானுஷ்யம் - வைரல் வீடியோ
செம்மறி ஆடுகள் விசித்திரமாக 12 நாட்கள் இடைவிடாமல் சுற்றி வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
பெய்ஜிங் - சீனாவின் மங்கோலியா நகரில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஆடுகளுக்குள் அமானுஷ்யம்
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
வீடியோவை பார்தத பலரும் ஆடுகளின் இந்த விசித்திரமான செயல்பாட்டுக்கு காரணம் என்ன என்று குழம்பி வருகின்றனர்.
விளக்கம் கொடுத்த மருத்துவ நிபுணர்கள்
இதேவேளை, குழப்பங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக ஆடுகளின் இந்த விநோத நடவடிக்கைக்கு 'லிஸ்டீரொயோசிஸ்' என்ற பாக்டீரியா நோய் தொற்று தான் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நோய் கிருமியானது மூளையின் ஒரு பகுதியை தாக்குவதால், ஆடுகள் இதுபோல் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் வட்டமிடும் என்றும் என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.
The great sheep mystery! Hundreds of sheep walk in a circle for over 10 days in N China's Inner Mongolia. The sheep are healthy and the reason for the weird behavior is still a mystery. pic.twitter.com/8Jg7yOPmGK
— People's Daily, China (@PDChina) November 16, 2022