சிம்பு பாடலுக்கு கருப்பு நிற வேஷ்டியில் குத்தாட்டம் போட்ட சின்னத்திரை நாயகி
பிரபல நடிகர் சிம்புவை போல் கருப்பு நிற ஆடை அணிந்து குத்தாட்டம் போட்ட ரவீனாவின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் அறிமுகம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் “ மெளன ராகம் 2 ” சீரியலில் அனைவருக்கும் ஆட்டம் காட்டு கதாநாயகியாக நடித்து வருவர் நடிகை ரவீனா.
இவர் விஜய் நடிப்பில் வெளியான “ஜில்லா” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிலும் பெயர் பதித்து வைத்திருக்கிறார்.
இவர் ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரான " Dance Jodi Dance 2.0" என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துக் கொண்டிருப்பார்.
இதனை தொடர்ந்து தான் “பூவே பூச்சூடவா” என்ற சீரியலில் நடித்து சின்னத்திரையில் ஒரு நடிகையாக அறிமுகமானார்.
இவரின் நடிப்பால “மௌன ராகம் 2” சீரியலை டிஆர்பி ரேட்டிங்கில் முதல் வைத்துள்ளார். அதில் ரவீனாவின் நடிப்பு பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கும்.
சிம்புவை மிஞ்சிய ரியாக்ஷன்
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ செய்து போடுவதை பழக்கமாவே கொண்டுள்ளார்.
இவரின் நடனத்தை பார்ப்பதற்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே உருவாகியிருக்கிறது, அந்தளவு இவரின் நடன காட்சிகள் இருக்கும்.
இந்நிலையில் நடிகர் சிம்புவைப் போல் கருப்பு நிற வேஷ்டி, சட்டை அணிந்து சிம்புவின் பாடலொன்றுக்கு நடனமாடியுள்ளார்.
இந்த வீடியோ காட்சியை இணையவாசிகள் பலரை கவர்ந்துள்ள நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள் நடிப்பிலும், நடனத்திலும் கலக்கிறீங்க” என ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.