கேப்டன் விஜயகாந்த் நடித்த தலைசிறந்த 10 திரைப்படங்கள்
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதையில், அவர் நடித்த பல படங்களில் இருந்து தலை சிறந்த 10 படங்களின் பெயர்கள் பற்றி பார்க்கலாம்.
கேப்டன் விஜயகாந்த்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த மாதம் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சில தினங்களில் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இன்று வெளியிட்ட அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரியவந்தது.
இதற்கு பல பிரபலங்களும் தங்களது இரங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர் நடித்த படங்களில் இருந்து தலைசிறந்த 10 படங்களை பற்றி பார்க்கலாம்.
சட்டம் ஒரு இருட்டறை
இயக்குனர் எஸ். ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு இந்த திரைப்படமானது வெளியானது. இந்த படத்தின் மூலமே இவர் தன்னை நட்சத்திரமாக நிலை நிறுத்தினார்.
இத்திரைப்படம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
வைதேகி காத்திருந்தாள்
இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இந்த கதாபாத்திரத்திற்கு இவர் சரியாக இருப்பார் என தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்து மிகப்பெரிய வெற்றி பெற்றுது.
திரையரங்குகளில் இந்த திரைப்படம் பெரிய வசூல் சாதனை செய்தது.
அம்மன் கோவில் கிழக்காலே
திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய சாதனையை இந்த திரைப்படம் பெற்றது.
வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக இன்று வரை பேசப்பட்டு வருகிறது.
கேப்டன் பிரபாகரன்
இந்த படத்தின் மூலம் தான் இவரை அனைவரும் கேப்டன் என அழைக்கத் தொடங்கினர். மிகப்பெரிய வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவையே புரட்டி போட்ட திரைப்படம் இது.
புலன் விசாரணை
காவல்துறை அதிகாரியாக விஜயகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமானது. இது இன்று வரை அனைவரலும் பேசப்பட்டு வருகிறது.
சத்ரியன்
இயக்குனர் மணிரத்னம் தயாரித்த இந்த திரைப்படத்தில் ஊழல் அரசியல்வாதியை எதிர்த்து போராடும் ஒரு கண்ணியமான காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.
இது மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து திரையரங்குகளில் சாதனைப் படைத்திருந்தது.
சின்ன கவுண்டர்
மென்மையான கதாபாத்திரத்தில் நடித்த படம் தான் சின்ன கவுண்டர். மிகப்பெரிய வசூல் சாதனை செய்த சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
வானத்தைப்போல
குடும்ப கதையை வைத்து நடிக்கப்பட்ட இந்த திரைப்படமானது 250 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி, வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ரமணா
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்தால் மட்டும் தான் சரியாக இருக்கும் என பலரும் ஏற்றுக்கொண்டனர்.
கதைக்களத்தை தாங்கி பிடித்து மிகப்பெரிய வசூல் சாதனையை இப்படத்திற்கு கொடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |