விவேக் மீண்டும் வரவேண்டும்.. தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட உருக்கமான பதிவு!
பிரபல நகைச்சுவை நடிகரான விவேக் நேற்றைய தினத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், இன்று காலை திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்ததில் அவர் மாரடைப்பால் மயங்கியதாகவும், உயர் ரத்தம் அழுத்தம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால், அவசர சிகிச்சை பிரிவில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இந்த நிலையில், தமிழ் திரையுலக பிரபலங்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் மீண்டு வர வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் விவேக் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார்.
அத்துடன் மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ள நடிகர் விவேக் குறித்த செய்தி வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் நலம் பெற்று திரைத்துறையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் விவேக் விரைவில் பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
— Vijayakant (@iVijayakant) April 16, 2021
நகைச்சுவை நடிகர் விவேக், நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். (1-2)