விஜயகாந்த் வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்! பயங்கர ஸ்டைலாக மாறிய கேப்டன்
நடிகர் விஜயகாந்த், தனது இளைய மகன் சண்முகபாண்டியனின் பிறந்த நாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சிறந்த நடிகர்
ரசிகர்களால் செல்லமாக கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் தனது கம்பீர நடிப்பினால் பல படங்களால் ரசிகர்களை கவர்ந்தவர். பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இவர் தேமுதிக கட்சி ஒன்றினை துவங்கி அரசியலில் கால் பதித்தார்.
ஒரு கட்டத்தில் எதிர்கட்சித் தலைவராகவும் அமர்ந்த இவர் சில ஆண்டுகளாக உடல்நிலை முடியாத காரணத்தினால் அரசியலில் இருந்து ஒதுங்கினார். சரியாக பேசவும், நடக்கவும் முடியாத இவருக்கு ஒரு நபரின் உதவியுடனே எங்கும் செல்வார்.
அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம்
இந்நிலையில் சமீபத்தில் விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள், தொண்டர்கள், நண்பர்கள், பிரபலங்கள் என அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆம் குறித்த புகைப்படத்தில் மிகவும் வயதானவராகவும், உடல் மெலிந்து அடையாளம் தெரியாமல் காணப்பட்டார்.
அதன் பின்பு சில வாரங்களுக்கு முன்பு மனைவியின் பிறந்தநாளில் அட்டகாசமான அழகுடன் காணப்பட்டார்.
இந்த 5 கெட்ட பழக்கத்தினை உடனே மாற்றிடுங்க! தரித்திரம் வரிசை கட்டி வருமாம்
மகனின் பிறந்தநாளில் விஜயகாந்த்
தற்போது தனது இளைய மகன் சண்முகபாண்டியனின் பிறந்த நாளை குடும்பத்துடன் கேக் கொண்டாடி உள்ளார். அதில், சிவப்பு நிறத்தில் டீ ஷர்ட் மற்றும் கூலிக் கிளாஸ் அணிந்து கொண்டு இருமகன்களின் தோளிலும் கைப்போட்டுக்கொண்டு சிரித்த முகத்துடன் நிற்கிறார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இன்று எனது இளைய மகன் சண்முகப்பாண்டியனின் பிறந்தநாளில், அவரை வாழ்த்திய போது..!#சண்முகப்பாண்டியன் | #Shanmugapandian | @vj_1312 pic.twitter.com/bACOYEipcq
— Vijayakant (@iVijayakant) April 6, 2022