விஜயகாந்திற்கு இந்த இடத்தில் எலும்பு இல்லையா? மகன் உடைத்த உண்மை
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் பிரபலமாக காணப்பட்ட விஜயகாந்த் தற்போது உடல்நல பிரச்சினையால் வீட்டிலிருந்து ஓய்வு எடுத்து வருகின்றார்.
விஜயகாந்த்
ஒரு காலக்கட்டத்தில் நடிப்பில் முன்னணியாக திகழ்ந்த விஜயகாந்திற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர். பின்பு அரசியலில் கால்வைத்த நிலையில், அங்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
ஆம் அரசியலில் களமிறங்கிய உடனே பிரபல முன்னணி கட்சிக்கு எதிர்கட்சியாக சென்று கம்பீரமாக அமர்ந்தார். மக்களுக்கு அனைத்து குறைகளையும் நிறைவேற்றிய விஜயகாந்த் நடிப்பிலும் இவரை அடித்துக் கொள்ளவே முடியாது.
சண்டை காட்சிகளில் டூப் போடாத இவர், உண்மையாகவே நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இவ்வாறு கம்பீரமாக திகழ்ந்த விஜயகாந்த் தற்போது வீட்டில் முடங்கி கிடக்கின்றார்.
விஜயகாந்திற்கு இந்த இடத்தில் எலும்பு இல்லையா?
நடிகர் விஜயகாந்திற்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தந்தையுடன் நடித்து நடிகராகவும் அறிமுகமானார் சண்முக பாண்டியன்.
இந்நிலையில் சண்முக பாண்டியன் தன்னுடைய அப்பாவை குறித்து பேசுகையில், திரைப்படம் ஒன்றில் நடித்த போது சண்டைக் காட்சியில் டம்மி துப்பாக்கி வைத்து சுடுவதாக இருந்துள்ளதாம்.
ஆனால் எதிரே நின்று சுட்ட நபரின் திடீரென உண்மையான துப்பாக்கி இருந்ததால், துப்பாக்கி குண்டு விஜயகாந்த் கண்புருவத்தில் துளைத்து சென்றுவிட்ட நிலையில், தற்போது வரை அந்த இடத்தில் எலும்பு இருக்காது என்று மகன் கூறியுள்ளார்.