தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தை- நாஞ்சில் விஜயனுக்கு குழந்தை பிறந்தாச்சு
நாஞ்சில் விஜயனுக்கு குழந்தை பிறந்த செய்தி காணொளியுடன் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
நாஞ்சில் விஜயன்
பிரபல தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகிய “அது இது எது?” என்ற நிகழ்ச்சியில் காமெடியனாக பிரபலமானவர் தான் நாஞ்சில் விஜயன்.
இவர், எந்த கெட் அப் கொடுத்தாலும் அதில் தன் 100 சதவீத உழைப்பை கொடுப்பது தான் நாஞ்சில் விஜயனை பிரபலமாக்கியுள்ளது.
“அது இது எது” நிகழ்ச்சியில் அதிகப்படியாக லேடி கெட் அப் போட்டு வந்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பது தான் இவரின் வேலை. இதனால் தான் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதற்கிடையில், நாஞ்சில் விஜயன் மரியா என்ற பெண்ணை கடந்த கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பின்னர் நாஞ்சில் விஜயனும் அவரது மனைவியும் சமூக வலைத்தளங்களில் தம்பதிகளாக பிரபலமாவது வழக்கமாக கொண்டிருந்தார். அவர்களின் ரீல்ஸ் காணொளியை பார்ப்பதற்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
குழந்தை பிறந்தாச்சு..
இந்த நிலையில், நாஞ்சில் விஜயனுக்கும் அவரது மனைவி மரியாவுக்கும் திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் குழந்தை பிறந்துள்ளது.
மகள் பிறந்ததும் நாஞ்சில் விஜயன் கண்ணீருடன் அவரை கையில் ஏந்திய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. காணொளியை பார்த்த இணையவாசிகள் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |