13 வருட காதலியை கரம்பிடித்த சீரியல் நடிகர்- பொண்ணு பார்க்க எப்படி இருக்காங்க தெரியுமா?
“வீட்டுக்கு வீடு வாசல்படி” சீரியலில் நடித்து வரும் நடிகர் அவினாஷ் நீண்ட நாள் காதலியை கரம்பிடித்துள்ளார்.
சீரியல் நடிகர் அவினாஷ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “அழகு” என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகமாகியவர் தான் நடிகர் அவினாஷ்.
இதனை தொடர்ந்து “டான்ஸ் ஜோடி டான்ஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஏற்கனவே சீரியல் பிரபலமாக இருந்த அவினாஷ் காலப்போக்கில் அவரது டான்ஸால் இன்னும் பிரபலமாக ஆரம்பித்தார்.
நிகழ்ச்சியில் இறுதிக்கட்டம் வரை சென்ற அவினாஷ் பயிற்சியின் போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இறுதி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
இதனால் சில மாதங்கள் ஓய்வில் இருந்து மறுபடியும் கயல் சீரியல் மூலம் சீரியலில் ரீ என்றிக் கொடுத்தார்.
நீண்ட காதலியை கரம்பிடித்த மகிழ்ச்சி
இந்த நிலையில், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “வீட்டுக்கு வீடு வாசற்படி” சீரியலில் கதாநாயகனின் தம்பியாக கலக்கி வருகிறார்.
சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த அவினாஷ் தன்னுடைய 13 வருட காதலியை திருமணம் செய்துள்ளார்.
இதன்போது தம்பதிகளாக எடுத்து கொண்ட புகைப்படங்களை அவினாஷ் அவர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், தங்களுடைய காதல் நட்பாக துவங்கி, காதலாக மாறி தற்போது கல்யாணத்தில் முடிந்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |