விஜய் டிவி உரிமையில் பெரிய மாற்றம்- பிரபல தொகுப்பாளர்கள் நீக்கம் உறுதியாகிவிட்டதா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கியமான 5 நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
அதிலும் குறிப்பாக கலக்கப்போவது யாரு, அது இது எது, சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் ஹிட் நிகழ்ச்சிகளாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறன.
இது போன்ற நிகழ்ச்சிகளால் தான் சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன், காபி வித் டிடி, குக் வித் கோமாளி புகழ், குக் வித் கோமாளி சிவாங்கி, விஜே மணிமேகலை உள்ளிட்டோர் பிரபலமானார்கள்.
வேலை நிறுத்தப்படும் தொகுப்பாளர்கள்
இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளை அதிரடியாக நீக்கப்படவுள்ளன.
அதன் மூலம் பிரபலமான தொகுப்பாளர்கள் மற்றும் போட்டியாளர்களும் வேலை நிறுத்தம் செய்யப்படவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, விஜய் தொலைக்காட்சி கலர்ஸ் நிறுவனத்திடம் விற்கப்பட்டிருக்கிறது. பல சிறிய சேனல்கள் நிதி நெருக்கடியால் மூடப்படலாம். ஒரு சேனல் தனது பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்வதில் சிரமப்பட்டால், அது தொழில் ரீதியாக தவறான வழிக்கு செல்லும் நிலைக்கு விஜய் தொலைக்காட்சி தள்ளப்பட்டிருக்கிறதாம். இதனால், கலர்ஸ் நிறுவனத்திற்கு விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதுவரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு, புதுப்பொலிவுடன் புத்தம் புதிய நிகழ்ச்சிகளை தொடங்க இருப்பதாக தெரிகிறது.
அதிலும் குறிப்பாக பிரியங்கா, கோபிநாத் போன்ற தொகுப்பாளர்களும் நீக்கப்பட இருப்பது உறுதி என்றும் கூறப்படுகிறது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |