அமீர் பாவனியின் ரொமாண்டிக் காட்சி! பிரியங்காவை அசிங்கப்படுத்திய மர்ம குரல்
பாவனியிடம் பல கோணங்களில் தனது காதலை வெளிப்படுத்திய அமீரிடம் தற்போது பாவனி தனது காதலைக் கூறி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார்.
பாவனி அமீர் காதல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் கலந்து கொண்ட இவர்களில், அமீர் பாவனியை காதலித்து வந்தார். ஆனால் பாவனி ஏற்கனவே காதலித்து வேறொரு நடிகரை திருமணம் செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அமீரின் காதலை பாவனி ஏற்றுக் கொள்ளாமல் இருந்த நிலையில் இருவரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியை தட்டிச் சென்றனர்.
பிபி ஜோடி நிகழ்ச்சியில் அமீர் பாவனியிடம் பலமுறை வித்தியாச வித்தியாசமாக தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனாலும் பாவனி எந்தவொரு பதில் அளிக்காமலே இருந்து வந்தார்.
காதலைக் கூறிய பாவனி
இந்நிலையில் புதிதாக பிரபல டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ஊ சொல்றியா.. ஊஹூம் சொல்றியா.. நிகழ்ச்சியில் இந்த வாரம் பிபி ஜோடிகள் சீசன் 2 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பிரபல ரிவியின் பிரபல தொகுப்பாளனியான பிரியங்கா மற்றும் மாகாபா தற்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். இந்த வாரா நிகழ்ச்சியில் மேடையில் எவ்வாறெல்லாம் உன்னிடம் காதலை வெளிப்படுத்தினார் அமீர்.
அதேபோல நீயும் வெளிப்படுத்த வேண்டும் என பாவனியை வற்புறுத்திக்கிறார் பிரியங்கா. பின்னர் காதல் பாடல் ஒலிக்க இவர்களது காதல் காட்சி அரங்கேறுகிறது.
இன்று இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார். மேலும் இதன் முடிவில் பிரியங்காவை மர்ம குரல் ஒன்று இப்போ நீ என்ன வேலை செய்திட்டு இருக்க தெரியுதா? என்று கேள்வி கேட்டு அசிங்கப்படுத்தியுள்ளது.
Finally Pavni ok சொல்லிட்டாங்கோ.. ? #AmirPavni #OoSolriyaOoOohmSolriya! - நாளை இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/i1ZZw9Tg7K
— Vijay Television (@vijaytelevision) September 24, 2022
![Best Time To Walk: வழக்கத்திற்கு மாறாக நடைபயிற்சி தரும் 9 வகையான பலன்கள்](https://cdn.ibcstack.com/article/013b8bf4-6fb9-4dfe-acb9-524ef902d474/25-67b420d874b14-md.webp)