சர்ச்சைக்கு மத்தியில் விஜய் பாதுகாவலர் போட்ட பதிவு - திரும்பவும் குழம்பிய ரசிகர்கள்
கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண விழாவிற்கு நடிகர் விஜய் மற்றும் தரிஷா ஒன்றாக சென்ற காணொளி வைரலாகியதை தொடர்ந்து தற்போது விஜய் பாதுகாவர் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

விஜய் திரிஷா
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், நடிகை த்ரிஷாவுடன் இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
விஜய் ரசிகர்கள் கூட விஜய் பற்றி அவர் அப்படி இல்லை இப்படி இல்லை என முட்டுகொடுத்துக்கொண்டு இருந்த சமயத்தில் விஜய் த்ரிஷாவுடன் சேர்ந்து ஒன்றாக வந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.
ஏற்கனவே விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த பிரச்சனையே ஒரு முடிவிற்கு வராமல் இருந்தது.

சங்கீதா அந்த மனுவில் விஜய் பற்றி பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு விஜய்க்கு இருப்பதாகவும் அதை சங்கீதா கண்டுபிடித்து சொல்லியும் விஜய் கேட்காமல் திரும்ப திரும்ப அதை தொடர்ந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இது சமூக வலைத்தள பக்கத்தில் விவாதத்தை ஏற்படுத்திகொண்டிருந்த சமயத்தில் 2 நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய், த்ரிஷா உடன் இணைந்து கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. சிலர் விஜய்க்கு எதிராகவும் கருத்து தெரிவித்தார்கள்.

பாதுகாவலர் பதிவு
திருமண நிகழ்வில் பங்கேற்ற விஜய் த்ரிஷா காணொளி வைரலானது ஒரு பக்கம் இருக்க... திருமண விழாவில் பங்கேற்க முன்னர் விஜயின் பாதுகாவலர் (Bodyguard) ஆருண் சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
இந்த பதிவில் “அனைத்து வதந்திகளையும் தாண்டி எழ வேண்டிய நேரம் இது” என பதிவிட்டு ஃபையர் எமோஜியையும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் விஜய் த்ரிஷா இணைந்து நடித்த ‘கில்லி’ படத்தில் இடம்பெற்ற ‘கொக்கரக்கொக்கர கோ’ பாடலையும் அதில் வைத்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் என்னதான்டா நடக்குது. எது தான் உண்மை என குழம்பியபடி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |