இதெல்லாம் இங்கிதமா? விஜய் பற்றி பேசிய பிரபல நடிகர்
விஜய் பற்றி நடிகர் ஜான் விஜயிடம் சில கேள்விகள் கேட்கப்பட்ட போது அவர் கூறிய பதில் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய்
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயை சுற்றி ஏராளமான சர்ச்சைகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
அவரது மனைவி ‘நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார்’ என கூறி விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார். இது சமூக வலைத்தள பக்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்படி ஒரு பக்கம் இருக்க நடிகை த்ரிஷாவுடன் விஜய் திருமண நிகழ்வொன்றில் ஒரு நிறத்தில் ஆடை அணிந்து கலந்து கொண்டது இணையத்தில் பேசுபொருளானது.

இதன் பின்னரும் விஜய் சும்மா இருக்காமல் ‘மகளிர் தின விழா’ கொண்டாட்டத்தில் ‘அது அந்த அளவுக்கு ஒர்த் இல்லை’ என தனது விவாகரத்து விடயம் தொடர்பில் பேசி இருப்பார்.
இப்படி ஏகப்பட்ட சர்ச்சைகள் விஜய் பற்றி சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக இருக்கும் போது நடிகர் ஜான் விஜய் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் “நிறைய தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது” என்று கூறினார்.

நடிகர் சொன்ன பதில்
இதன் பின்னர் செய்தியாளர்கள் விஜய் குறித்து கேள்வி கேட்டார்கள் அதற்கு அவர் “யார் யார் என்ன செய்ய வேண்டுமோ, அவரவர் அதை செய்துகொண்டிருக்கிறார்.
எங்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ, நாங்கள் அவருக்கு ஆதரவு கொடுப்போம்.
என்னுடைய சக நடிகர் சமூக சேவை செய்வதற்காக அரசியலுக்குள் நுழைகிறார் என்றால் அதை பாராட்ட வேண்டுமே தவிர, அதை விமர்சிக்க கூடாது.அவர் என்ன செய்ய போகிறார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும்.
சக நடிகராக நான் அவருக்கு வாழ்த்து கூறுகிறேன்.” என்று கூறினார்.

இதன் பின்னர் செய்தியாளர்கள் விஜய் - த்ரிஷா பற்றி கேட்டார்கள் அதற்கு ஜான் விஜய் “ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை பேசுவது அசிங்கமான விஷயம்.
அவரவர் அவர் வீட்டில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தால் நல்லது.விஜய் நாட்டுக்கு என்ன செய்ய போகிறார், நம் ஊருக்கு என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து தான் பேச வேண்டுமே தவிர, அவர் பாத்ரூமில் என்ன செய்கிறார் என்பது குறித்து பேச நாம் யாருக்கும் அருகதை இல்லை.
விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது இங்கிதம் கிடையாது என்பதை தான் நான் நினைப்பேன்” என்று மிகவும் தெளிவாக கூறினார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |