மாடலுடன் நெருக்கமாக விஜய் தேவர் கொண்டா - வைரல் புகைப்படம்
ரஷ்மிகாவை திருமணம் செய்துகொள்ள இருக்கும் நிலையில் விஜய் தேவர் கொண்டா வேறொரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராஷ்மிகா விஜய் தேவர் கொண்டா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். தமிழை தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் ராஷ்மிகா மந்தனாவும், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்துனொண்டிருந்தன.

ஆனால் இதில் சம்பந்தபட்ட இருவரும் எதுவும் கூறாமல் இரந்த நிலையில் இவர்களுக்கு நிச்சயதார்தம் முடிந்து தற்போது திருமணத்திற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக காணொளி வெளியாகி இருந்தது.
இப்படி ஒரு பக்கம் இருக்க தற்போது விஜய் தேவர் கொண்டா வேறொரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

யார் அந்த பெண்?
தற்போது கிடைத்த சில தகவலின்படி விஜய் தேவரகொண்டா பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு மாடலுடன் டேட்டிங் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மாடலுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய்யும் இந்த மாடலும் சில வருடங்கள் டேட்டிங் செய்ததாக கூறப்படுகின்றது.

இதனை தொடர்ந்து அந்த மாடலின் பெற்றோர் ஹைதராபாத் வந்திருந்ததாகவும் விஜய் தேவரகொண்டா அந்த மாடலை சந்திக்க ஐரோப்பா சென்றிருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், இது குறித்த எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கபடவில்லை. இந்த மாடல் வர்ஜீனி என்பவராம். இவர் விஜய் தேவர் கொண்டாவுடன் 2016-ல் வெளியான 'பெல்லி சூப்புலு' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகின்றது.
அதிலும் இவர்கள் இருவருக்கும் நடுவில் நட்பு தான் உள்ளது எனவும் கூறப்படுகின்றது. ஆனால் ரசிகர்கள் இது நட்பு போல இல்லை என கருத்து தெரிவித்து வருகின்றர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |