வெறிக்கொண்டு சாப்பிடுபவர்களை அலறவிட்ட நீயா நானா- வாயடைச்சு போன கோபி
வெறிக் கொண்டு சாப்பிடுபவர்களின் திறமைகளை கண்டு நீயா நானா கோபிநாத் வியந்து போயுள்ளார்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் வாரம் வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் நீயா நானா. நீயா? நானா? என்றால் இது ஒரு விவாத நிகழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது.
தொகுப்பாளர் கோபிநாத் நெடுங்காலமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில், நீயா நானாவில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறும்.
இவ்வாறு நீயாநானாவில் வாதிடப்படும் சில தலைப்புகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பும்.
கிலோ கணக்கில் சாப்பிடும் போட்டியாளர்கள்
இந்த நிலையில் இந்த வாரம், அதிகம் சாப்பிடுபவர்கள், அதனை விமர்சிப்பவர்கள் என இரண்டு தரப்பினர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
சாப்பாட்டை நாங்கள் விரும்பி சாப்பிடுகிறோம். அதனால் நான் எங்களால் அதிகமான உணவை எடுத்து கொள்ள முடிகின்றது என்பதனை ஒரு குழு பதிவு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து சாப்பாட்டை சிலர் பெறுமைக்காகவும், உள்ளுக்குள் இருக்கும் ஆசையினாலும் தான் அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்கிறார்கள். இதனை பிரச்சினை அதிகரிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வைத்தியர் ஒருவரை பார்க்க வேண்டும் என ஒரு குழு பதிவு செய்துள்ளது.
இருந்த போதிலும் சாப்பாட்டை ருசித்து சாப்பிடுவதற்கு பதிலாக அதனை போட்டியாக வைத்து சாப்பிடும் பொழுது செரிமான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
மேலும், 5 kg சிக்கன், 30 இட்லி, 41 ஆம்லேட்.. இப்படி போட்டியாளர்கள் சாப்பிட்ட சாப்பாட்டை அடுக்கிக் கொண்டே போவதை கண்டு, தொகுப்பாளர் கோபிநாத் வாயடைச்சு போயுள்ளார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வாரம் வேறு என்னென்ன சுவாரஷ்யங்கள் இருக்கின்றன என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |