சஞ்சய்க்கு ரொம்ப பிடிக்கும்! மகனை பற்றி விஜய் சொன்ன சீக்ரெட்
சந்தீப் கிஷனை சந்தித்தபோது விஜய் அவருடைய மகன் பற்றி அவரிடம் கூறிய விடயம் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

முதலமைச்சர் விஜய்
தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சந்தீப் கிஷன்.
தமிழில் 'யாருடா மகேஷ்' படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பின்னர் 'மாநகரம்' திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

இதன் பின்னர் தற்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அதில் பல விடயங்களை கூறி இருந்தார். அதில் விஜய் தன்னுடைய மகன் பற்றி கூறி விடயங்களும் வைரலாகி வருகின்றது.

விஜய் பேசியது
கிஷன் பேசுகையில் "நான் விஜய் அவர்களை முதன்முதலாக லியோ படத்தின் துவக்க விழாவில் சந்தித்தேன். அப்போது லோகேஷ் கனகராஜ் என்னை விஜய் சாரிடம் அழைத்துச் சென்றார்.
விஜய் சார் மிகவும் இனிமையாகவும், பணிவாகவும் நடந்துகொண்டார். நான் நடித்த படங்கள் குறித்து பேசினார். குறிப்பாக மாநகரம் படத்தில் நான் பேசிய வசனத்தைக் குறிப்பிட்டு நீண்ட நேரம் பேசினார்.

அப்போது விஜய் சார், 'என் மகனுக்கு உங்களை மிகவும் பிடிக்கும்' என்று கூறினார். அதேபோல், சஞ்சய் என்னை முதன்முதலில் சந்தித்தபோதும், 'உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.
உங்கள் படங்களை பார்த்திருக்கிறேன்' என்று கூறினார்” என சந்தீப் கிஷன் தெரிவித்தார். "நாம் உருவாக்கும் படைப்புகளை இப்படிப்பட்ட முக்கியமான நபர்கள் கவனிக்க வேண்டும் என்று நினைப்போம்.
அது உண்மையில் நடந்தது எனக்கு மிகுந்த பெருமையாக இருந்தது” என்று நெகிழ்ச்சியுடன் கூறி இருந்தார். இதற்கு தற்போது பல விஜய் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |