ரசிகர்களை சந்திக்க கெத்தாக வந்த விஜய்.. சட்டையின் விலை மட்டும் இத்தனை ஆயிரமா?
ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க வந்த விஜய் அணிந்திருந்த சட்டையின் விலை குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
ரசிகர்களை சந்தித்த விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய், இளைய தளபதி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் “ரஞ்சிதமே” பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானது, எனினும் நடனம், உடை சரியில்லை என விமர்சனங்களையும் சந்தித்தது.
இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் ரசிகர்களை நேற்று சந்தித்துள்ளார் விஜய், பனையூரில் ரசிகர்களை சந்தித்து பேசிய விஜய் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.
நாமக்கல் சேலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வருகை தந்திருந்தனர்.
ரசிகர்களுக்காக சுடச்சுட பிரியாணியும் பரிமாற்றப்பட்டது.
Another one ??
— Chandruvijay (@Chandrusurya16) November 20, 2022
Annaaa???????#Varisu @actorvijay #ThalapathyVijay pic.twitter.com/3h6VXLPxOu
விஜய் சட்டையின் விலை
இதற்காக விஜய் வெள்ளை நிற சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்து வந்திருந்தார், மிக ஸ்டைலாகவும், அதே சமயம் எளிமையாகவும் வந்த விஜய்யின் சட்டை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
BUR BERRY பிராண்டை சேர்ந்த அந்த சட்டையின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி 40,000 ஆயிரம் ரூபாயாகும்.
இந்த பிராண்டின் லோகோ தெளிவாக தெரியும் வகையில், சட்டையில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது.
Thalapathy @actorvijay Sir.! @TVMIoffl @Jagadishbliss @RIAZtheboss#Varisu pic.twitter.com/K9uNDPmarb
— Bussy Anand (@BussyAnand) November 20, 2022