Bigg boss 9: அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி- எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 9 இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தொகுப்பாளரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவருடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.
பிக்பாஸ் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது 9-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியளவில் பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மாலை 6 மணியளவில் முதல் ப்ரோமோ வீடியோ வெளியானது. இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார். எதிர்வரும் அக்டோபர் 5 ஆம் தேதி பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது.
சம்பள விவரங்கள்
இந்த நிலையில், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய கடந்த சீசனுக்கு 6.88 டிஆர்பி ரேட்டிங் கிடைத்தது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 7 இறுதி நிகழ்ச்சி விட இதற்கு அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகும் விஜய் சேதுபதிக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், கடந்த சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு ரூ.60 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஒன்பதாவது சீசனுக்காக ரூ.75 கோடி சம்பளம் வழங்கப்பட இருக்கிறதாம். ஒரு திரைப்படத்தில் கதாநாயகராக நடிப்பதற்கு விஜய் சேதுபதி ரூ.25 கோடி வாங்கி வரும் நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு 50 கோடி அதிகமாக வாங்குவது ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |