‘எனக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு போ...’ - விஜய் சேதுபதியிடம் க்யூட்டா பேசிய குட்டி ரசிகர்!
நடிகர் விஜய் சேதுபதியிடம் க்யூட்டா பேசிய குட்டி ரசிகரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், பீட்ஸா, தென்மேற்கு பருவக்காற்று, ஆரஞ்சு மிட்டாய் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்சேதுபதி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஸ்பெஷலான இடத்தை தக்கவைத்து கொண்டு வருகிறார்.
இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பெரிய மாஸ் ஹீரோக்களுக்கு கிடைக்கும் வரவேற்பு விஜய் சேதுபதிக்கு உண்டு. விஜய் சேதுபதி தன் ரசிகர்களை சகோதர, சகோதரிகளாக மரியாதையோடு கூப்பிடுவார். அவரது ரசிகர்களும் கொரோனா காலங்களிலும், மற்ற சமயத்திலும் பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்கள்.
க்யூட்டா பேசிய குட்டி ரசிகன்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
விஜய் சேதுபதியை பார்க்க குட்டி ரசிகன் ஒருவர் வந்தார். அவரிடம் மேக்கப் ரூமில் விஜய்சேதுபதி அச்சிறுவனிடம் பேசினார். தன்னுடைய மழலைக் குரலில் பேசிய சிறுவனிடம் விஜய்சேதுபதி கேள்விகளை கேட்டார்.
அதற்கு அச்சிறுவன் க்யூட்டா பதில் கூறினான். சாக்லேட்டை கொண்டு வரச் சொல்லி அச்சிறுவனுக்கு விஜய்சேதுபதி கொடுத்தார். போகும்போது, அச்சிறுவனிடம் முத்தம் ஒன்றை கேட்டு வாங்கிக்கொண்டார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
#MakkalSelvan #VijaySethupathi ?
— VIJAY SETHUPATHI FC ® (@VijaySethu_FC) April 5, 2023
- @VijaySethuOffl na ? pic.twitter.com/T4sXDKgPGa